தமிழகத்தில் மாநகர சாதாரன பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் செயல்பட்டி வந்தது. இந்த நிலையில் தவெக தேர்தல் வாக்குறுதியில் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது.
அந்தன்படி தவெக ஆட்சி அமைத்ததையடுத்து முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் வெற்றிப் பயணம் திட்டத்தை அறிவித்தார். அதன்படி காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் புறநகர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்களாம்.
இந்த நிலையில் சென்னையை தவிர்த்து மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. வெற்றிப் பயணம் திட்டத்தால் தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தனியர் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் நாங்களும் பெண்களை இலவசமாக ஏற்றிச்செல்ல தயாராக இருக்கிறோம், வெற்றிப் பயணம் திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கு விரிவு படுத்த வேண்டும், அதற்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேற்குறிப்பிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என கூறப்படுகிறது.




