சுமார் 3500 ஆண்டுகளாக அப்படியே புதைந்து கிடந்த கரடியை ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் பழமையான கரடி முழுமையாக கண்டறிவது இதுவே முதன்முறையாகும்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிழக்கே 4600 கிலோமீட்டர் தொலைவில் நியூ சைபீரிய தீவுக் கூட்டம் உள்ளது. இந்த தீவுக்கூட்டத்தில் உள்ள பகுதியில் விவசாயிகள் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு உயிரிழந்து கிடந்த கரடியின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விஞ்ஞானிகள் அங்கு சென்று ஆராய்ச்சி நடத்தி வந்ததில் அந்த கரடியின் உடல் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட ஆராய்ச்சியாளர்கள், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதன் உடல் அழுகவில்லையே என்று ஆச்சரியம் அடைந்துள்ளனர். குளிரான இடத்தில் இருப்பதால்தான் இத்தனை ஆண்டுகள் ஆன பிறகு கரடியின் உடல் அழுகவில்லை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்தக் கரடி 1.55 மீட்டர் உயரமும் சுமார் 78 கிலோ எடை கொண்டதாகவும் இருந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் பழமையான விலங்கு ஆய்வாளர்கள் கைகளில் கிடைப்பது இதுவே முதல்முறை. அதன் உள்ளுறுப்புகள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.
அண்மைச் செய்தி:ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல்
இந்த கண்டுபிடிப்பு குறித்து விஞ்ஞானி மாக்சிம் செப்ராசோவ் கூறுகையில், இந்த கண்டுபிடிப்பு முற்றிலும் தனித்துவமானது. ஒரு பழங்கால பழுப்பு கரடியின் முழுமையான சடலம் இது. முதன்முறையாக மென்மையான திசுக்களை கொண்ட ஒரு சடலம் விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது. ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியான யாகுடியா மற்றும் மற்றும் சுகோட்காவில் காணப்படும் நவீன கரடியில் இருந்து டிஎன்ஏ-வில் இந்த 3500 ஆண்டுகள் பழங்கால கரடி வேறுபடவில்லை என்று கூறினார்.