புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் கிருஷ்ணர்கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாபெரும் கைப்புறா எல்கை பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் கிராமத்தில் உள்ள
கிருஷ்ணர்கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாபெரும் கைப்புறா பந்தயம்
நடைபெற்றது. முதலாம் ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியானது பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. பெரியமாடு பிரிவில் 6 மாடுகளும்,நடுமாடு பிரிவில் 12 மாடுகளும்,சின்னமாட்டடு பிரிவில் 16 மாடுகளும் என மொத்தம் 34 மாடுகளும் 34 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி,ஆவுடையார் கோயில், பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி மாட்டை கயிற்றால் பிடித்துக் கொண்டு வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கயிற்றை பிடித்துக் கொண்டு மாட்டின் வேகத்தோடு சேர்ந்து ஓடிய வீரர்களை சாலையில் இருபுறமும் நின்று கொண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும்,சிறப்பாக ஓடிய வீரர்களுக்கும் சேர்த்து மொத்தம் ஐம்பதாயிரம் ரொக்கப்பணம் மற்றும் பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.