திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள்!

தரங்கம்பாடியை அடுத்த திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஆடி கிருத்திகையையொட்டி  கோலாட்டம் ஆடிபாடி பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனா். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருவிடைக்கழி என்ற ஊரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.…

தரங்கம்பாடியை அடுத்த திருவிடைக்கழி பாலசுப்ரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஆடி கிருத்திகையையொட்டி  கோலாட்டம் ஆடிபாடி பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருவிடைக்கழி என்ற ஊரில்
புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால்
திருப்புகழ் கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் உள்ளிட்ட நூல்களில் திருவிடைகழி
பற்றி பாடப்பட்டுள்ளது. சேந்தனார் பெருமானால் பாடப்பட்ட திருவிசைப்பா
திருப்பல்லாண்டு ஆகிய நூல்கள் இந்த ஆலயத்தில் இருந்து இயற்றப்பட்டது
குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு ஆடி கிருத்திகை விழா  நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தர துவங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக குராவடி குமரன் வார வழிபாட்டு மன்றம் சார்பில் 32 ஆம் ஆண்டு பாதயாத்திரை  கும்பகோணம் அருகே சுவாமிமலையில் துவங்கியது.

இதனையடுத்து  கும்பகோணம் ஆடுதுறை குத்தாலம் மயிலாடுதுறை செம்பனார்கோயில் வழியே ஆலயத்தை சென்றடைகிறது. நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் பாதயாத்திரையாக செல்லும் நிலையில் 50 பேர் கொண்ட இளைஞர்கள் சிறுவர்கள் முதிய ஆண்கள் கோலாட்டம் ஆடியபடியே பாதயாத்திரை சென்றனா். மேலும் செம்பனார்கோயில் வருகை தந்த பாதயாத்திரைக்கு பொதுமக்கள் வணிகர்கள் வரவேற்பு அளித்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.