திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில்
பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி கல்யாண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர்
பூசானம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (17). சரளா
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியில் உள்ள சாக்ரெட்
ஹார்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் அங்குள்ள
விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று காலை இறை வணக்கம் முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். இதையடுத்து, விடுதி அறையில் மாணவி சரளா தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில் மப்பேடு போலீசார் சாக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாணவியின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் யாரையும் விடுதிக்குள் அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்காமல் பூட்டு போட்டு பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் எந்த தகவலும் பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் மாணவியின் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, சிபிசிஐடி மற்றும் திருவள்ளூர் எஸ்பி பெகர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார், மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஆகியோர் பள்ளி விடுதிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 மாணவி உயிரிழந்ததை அடுத்து அந்தப் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. பதற்றத்தை தவிர்க்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பிரேதப் பரிசோதனைக்காக மாணவி உடல் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுப்பி வைத்ததால் அங்கு 500க்கும் மேற்பட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திருத்தி எடுத்த தெக்கலூர் பகுதியில் சரளாவுடைய உறவினர்கள் 2 மணி நேரமாக சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது அந்த பகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் பாசிப் கல்யாணம் தெரிவித்துள்ளார். பெற்றோருடைய உறவினர்கள் மற்றும் சரளாவுடன் படித்தவர்களின் பெற்றோர் அனைவரும் பள்ளி வளாகத்தின் முன் குவிந்துள்ளனர்.
திருவள்ளுர் மாணவி மரணம் சந்தேக மரண வழக்காக பதியப்பட்டு சிபிசிஐடியிடம் ஒப்படைத்துள்ளதாக காஞ்சிபுரம் சரக காவல்துறை டிஐஜி சத்யபிரியாவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சியை அடுத்து கனியாமூரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த மரணம் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்தபோது பள்ளி மாணவர்கள் உயிரிழப்பை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.