திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடந்த மாதம் 24ம் தேதி தனது மூன்று ஆடுகளை அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தப்போது மூன்று ஆடுகளும் திருடுப்போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் உதயகுமார் புகாரளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, காரில் வரும் மூன்று நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது அம்பலமானது.
இதனைத்தொடர்ந்து, இந்த மர்மகும்பலை தேடத்தொடங்கினர். அப்போது சிசிடிவி வீடியோ அடிப்படையில், மதுரவாயலை சேர்ந்த சரத்குமார், லட்சுமி, அஜித்குமார் ஆகியோரை கைது செய்தனர்.தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேந்தன்







