மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற மாமன்னன் படம் இன்று தெலுங்கில் வெளியாகியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
மாமன்னன் படத்தை வெளியிடுவதற்கு முன் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருந்து வந்தது. மேலும் தேனி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் படம் வெளியான பிறகும் படத்தை வெளியிட கூடாது என்றும் அப்படி வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என போராட்டங்கள் நடந்தன.ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.10 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டது. தமிழில் மாமன்னன் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் ‘நாயகுடு’ என்ற பெயரில் இன்று தெலுங்கில் இப்படம் வெளியாகிறது.
பிரபல பாகுபலி நடிகர் பிரபாஸ் மாமன்னன் தெலுங்கு படத்தின் போஸ்ட்ரை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/RedGiantMovies_/status/1679668817407127552







