திருவள்ளூர் மாவட்டத்தில் தடையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 135 வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர் 11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில், பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 155 நபர்கள் மீது 135 குற்ற வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர், 86 லட்சத்து 70 ஆயிரத்து 382 ரூபாய் மதிப்பிலான 11 ஆயிரத்து 389 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 16 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
குட்கா புகையிலை விற்பனை தொடர்பாக புகார் அளிக்க 63799 04848 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் வழங்கி இருக்கிறது. மேலும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.







