முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக (Valley) மாற்ற திட்டம்: அமைச்சர் மனோ தங்கராஜ் 

ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக(Valley) மாற்றும் திட்டம் செல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு சொந்தமான இ-சேவை மையங்கள் மற்றும் அரசு கேபிள் டிவி மையங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஓசூரில்  திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா, கடந்த 10 ஆண்டுகளில், எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை என்ற அமைச்சர்,  எல்காட் வெகுவிரைவில் முழு அளவிலான பயன்பாட்டிற்கு நிச்சயமாக கொண்டு வரப்படும் என்றார். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, ஓசூரை தமிழ்நாட்டின் சிலிக்கான் வேலியாக(Valley) மாற்றும் திட்டம் செல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

முதலீட்டாளர்களும், தொழில்முனைவோர்கள் தமிழ்நாட்டை தேர்வு செய்யும் அளவிற்கு தொழில் செய்வதற்கான வழிமுறைகள் எளிதாக மாற்றி அமைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். இணையவழி கல்வியை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் விர்ச்சுவல் அகடமி வாயிலாக இணையவழியில் தமிழ் கற்பிக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அப்டேட் கேட்ட ரசிகர்கள்! அறிக்கை விட்டு அட்வைஸ் செய்த அஜித்!!

Niruban Chakkaaravarthi

சேடப்பட்டி முத்தையா மறைவு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

EZHILARASAN D

ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல் எதிரொலி ; நமது அம்மா ஆசிரியர் விலகல்

Web Editor