டிஎன்பிஎல் டி20: லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் திருச்சி அணி பேட்டிங்…

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் திருச்சி அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பேட்டிங் செய்த திருச்சி அணி

தொடர்ந்து, நித்திஷ் ராஜகோபால் 28 பந்துகளில் 45 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. கோவை அணியின் பந்து வீச்சாளர்கள் அபிஷேக் தன்வர், கிருஷ்ண மூர்த்தி, விக்னேஷ் செல்வகுமாரன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். சாய் சுதர்சன் 43 பந்துகளில் 57 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். 18 புள்ளி ஒரு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்து கோவை அணி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.