நிதியமைச்சர்களும், தென்மாவட்டங்களும்..!!!

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். இவரைப் போல தென் மாவட்டங்களில் இருந்து நிதியமைச்சர்களாக இருந்தவர்கள் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு…. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த…

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். இவரைப் போல தென் மாவட்டங்களில் இருந்து நிதியமைச்சர்களாக இருந்தவர்கள் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு….

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ  டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது.

அதன்படி இன்று ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகளை ஆளுநர் மாளிகை வெளியிட்டது. இதன்படி தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சராக தங்கம் தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களும் தென்மாவட்டங்களும்..!!

சமீப காலமாக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக தொடர்ச்சியாக பொறுப்பு வகிக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும்  எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதலமைச்சராக இருந்த போது, போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ வான ஓ.பன்னீர் செல்வம் 2011- 21 கால கட்டத்தில் நிதியமைச்சராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சர் பொறுப்பையும் தன்வசம் வைத்திருந்தார்.

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற போது மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2021-23, தற்போது, திருச்சுழி தொகுதியில் இருந்து வென்ற தங்கம் தென்னரசு (2023 முதல்) ஆகியோர் தற்போது நிதியமைச்சர் வரிசையை அலங்கரிக்கின்றனர்.

இதற்கு முன்பும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நிதியமைச்சராக இருந்துள்ளனர். எம்ஜி ஆர் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற போது, பாளையங்கோட்டையில் இருந்து வென்ற நாஞ்சில் மனோகரன் 1977-80, நிதியமைச்சராக இருந்தார்.

அதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும், திருநெல்வேலி, ஆத்தூர், தேனி தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் அதாவது 1980-1988, 1991-96 ஆண்டுகளில் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.