திருப்பத்தூர் அருகே தனியார் மாம்பழக் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கரியம்பட்டி பகுதியில் மாம்பழம் கூல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இத்தொழிற்சாலையிலிந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், மேலும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், நேரடியாக ஏரி பகுதியில் கழிவுநீரை திறப்பதால் மீன்கள் செத்து மிதப்பதாகவும் அவற்றை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் தெரிவிக்கும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழிற்சாலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 15 ஆண்டு காலமாகப் பல்வேறு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தண்ணீரை குடிப்பதினால் மக்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுவதாகவும் மேலும் ஆடு மாடுகள் தண்ணீரை குடிப்பதினால் இறந்து போவதாகவும் அவர்கள் வேதனைத்
தெரிவித்தனர்.
ரெ.வீரம்மாதேவி
மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: