வேடிக்கை பார்த்த இளைஞர் லாரியில் மோதி விபத்து!

போராட்டத்தை வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த இளைஞர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி அருகே திருமழிசை டாஸ்மாக் குடோனில் இன்று காலை முதல் ஒப்பந்ததாரர்கள் நிலுவைத் தொகை வழங்க கோரி போராட்டத்தில்…

போராட்டத்தை வேடிக்கை பார்த்து நின்று கொண்டிருந்த இளைஞர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
பூந்தமல்லி அருகே திருமழிசை டாஸ்மாக் குடோனில் இன்று காலை முதல் ஒப்பந்ததாரர்கள் நிலுவைத் தொகை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னை பெங்களூர் தேசிய  நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இந்த குழுவில் நடைபெற்று வரும் போராட்டத்தை வேடிக்கை பார்த்தவாறு வந்த பால் ராஜ் என்ற இளைஞர் சாலை அருகே நிருத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் சிக்கி காயமடைந்த இளஞரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வரவைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.