தினந்தோறும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் சிறப்புகளை , “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தலைப்பின் கீழ், நாம் படித்து பொருளறிந்து வருகிறோம். அதன்படி பெரியாரைத் துணைகோடல் என்ற தலைப்பின் கீழ், திருமந்திரத்தின் 527வது பாடலில் திருமூலர் அருளியதைப் பார்ப்போம்… 
பெரியாரைத் துணைக்கோடல்
அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியாருடன் கூடல் பேரின்ப மாமே. (திருமந்திரம், 527)
இதன் பொருளாவது, சிலர் தேவர்க்கும் மூவர்க்கும் யாவர்க்கும் மேலாம் சிவபெருமானைத் திருவருளால் உள்ளத்தே நாடி அறிவர். அவன் திருவடியொடுக்கத்தால் மெய்யுணர்வு கைவரப் பெறுவர். தத்துவம் – மெய்; மெய்யுணர்வு. வாழ்வில் கடைபிடிக்கும் நெறிதான் ஒருவருக்கு மிக மிக நின்று அருள் செய்யக் கூடாது. அதேபோல் தம்மை விட அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கும் பெரியாருடன் கூடி வாழ்வதே பேரின்பமாம் என்கிறார் திருமூலர்.
-வெற்றிநிலா







