“திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை!” – மாணிக்கம் தாகூர்

திமுகவும், தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் கோவை, சேலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பயணம் செய்கிறார். அதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களுக்கு செல்கிறோம். நீட் தேர்வினால் 5 மாணவிகள் உயிரிழந்து உள்ளனர். இந்த கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய அமைஒச்சர் பிரதான் அர்த்தமில்லாத விளக்கங்களை தந்து கொண்டு இருக்கிறார். நீட் காரணமாக தமிழகத்தில் 37 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. நீட் தேர்வு பயிற்சி மையங்களில் ரூ.5 ஆயிரம் கோடி தொழில் நடந்து உள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வினாத்தாள் கசிவதால் லீ தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகிறது. இந்தியா முழுவதும் நேர்மையான தேர்வு முறை வேண்டும் என ராகுல் காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்க்ளுக்கு ஆறுதல் சொல்ல செல்கிறோம்.

பா.ஜ.க.வை எதிர்க்க ஒரே அணியில் திமுகவும் தவெகவும் வர வேண்டும் என்ற திருமாவளவனின் பார்வை தொலை நோக்கு பார்வையாகும். சட்டமன்றத்தில் உள்ள எம்.எல்.ஏக்களை மட்டும் வைத்து பார்க்க கூடாது. தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும். கேரளாவில் கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் நேர் எதிராக இருக்கிறோம் ஆனால் பா.ஜ.க. எதிர்ப்பில் ஒற்றுமையாக இருக்கிறோம். அதுபொன்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக வேண்டும். இரு கட்சிகளும் தயாராக வேண்டும். கேரள மாடல் போல் இருக்க வேண்டும். தமிழகத்தை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அதிகாரம் இல்லாத மாநிலமாக கொண்டு வர திருமாவளவன் நினைக்கிறார்.

கரூரில் முதலமைச்சர் தனக்கு மிகுந்த வலியான சம்பவம் என்று கூறி உள்ளார். அது விஜய் ஸ்டைல்.

கர்நாடக மாநில அரசியல்வாதிகள் ஒன்றாக இருக்கிறார்கள். அது போல் தமிழகத்திலும் எல்லா அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் என்ன தீர்மானம் போட்டமோ அந்த நிலையில் இருந்து மாற கூடாது” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.