ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியா? தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் முன்வைத்த கோரிக்கை

சிவந்தி ஆதித்தனாரின் 87 வது பிறந்த நாளையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்கள். அஞ்சலி செலுத்திய…

சிவந்தி ஆதித்தனாரின் 87 வது பிறந்த நாளையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்கள்.

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், எளிய மக்கள் கல்வி பெற வேண்டும் என்று நினைத்தவர் ஆதித்தனார் எனவும், மனவளர்ச்சி, கல்வி வளர்ச்சி இரண்டிற்காகவும் தன்னுடைய நேரத்தை ஒதுக்கி விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தென்காசி அருகே பாஞ்சாகுளம் என்னும் இடத்தில் பள்ளி குழந்தைகளின் நெஞ்சை காயப்படுத்தும் வகையில் சாதி வெறி பிடித்து பெட்டிக்கடைகளில் மிட்டாய், தின்பண்டம் வழங்குவதில் மிகப்பெரிய சாதி வன்கொடுமை நடந்துள்ளது. ஊர் கட்டுப்பாட்டு என்று சொல்லி ஊர் கட்டுப்பாட்டில் இருந்த அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் எனக் கூறிய அவர், இவ்வாறு செய்தவர்களை ஆறு மாதத்திற்கு ஊருக்குள் வரவிடாமல் செய்திருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றார்.

வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகள் பிறந்த நாளன்று, தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒன்றியங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை நடத்தப்படும் எனக் கூறிய அவர், நேரடியாக காந்தியடிகளுக்கும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர் காந்தியடிகள், அப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரரை ஆர்எஸ்எஸ் கொச்சைப்படுத்துவது கண்டனத்திற்குரியது , இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கிறது என்றார்.

அவருடைய பிறந்தநாள் அன்று ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கேட்டிருக்கிறார்கள் உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது, தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் ஒரு நாளும் அவர்கள் சொல்வது இங்கு எடுபடாது 95 சதவீதம் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிந்து விட்டதாக கூறினார்கள் இது எவ்வளவு பெரிய பொய் என்பதையும் அவர்களே தெரிந்து கொண்டிருப்பார்கள்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுக-பாஜக கூட்டு சதியை முறியடித்து ஆட்சி அமைத்தது தான் திமுக அரசு. அதை குறைவாக எடை போடக்கூடாது எனவும், கருணாநிதிக்கு வரலாற்று சின்னம் அமைப்பது தேவைதான். அதை எந்த அளவில்,என்ன செலவில் செய்வது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.