“திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு 960 சொத்துக்கள்”

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளது என்று திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார். திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து இன்று…

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.85,705 கோடி மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளது என்று திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பல மணி நேரம் ஒரே இடத்தில் காத்திருப்பதைத் தவிர்க்க நேர ஒதுக்கீடு செய்யும் சர்வ தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் செய்யப்பட உள்ளது.

திருப்பதியில் தினமும் 20,000 டிக்கெட் தரப்பட்டு ஒதுக்கீடு செய்த நேரத்தில் திருமலை சென்று 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.