வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு சேலம் ,திண்டுக்கல் ,ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை, தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிங்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, வடஅந்தமான் தீவு பகுதியில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு, புயலாக மாறி ஒடிசா அல்லது மேற்குவங்கம் அருகே கரையை கடக்கலாம் என்று கூறியுள்ளாது.
தொடர் மழையின் காரணமாக நோய்கள் வேகமாக பரவக்கூடும் என்பதால், தமிழகம், ஆந்திரா, மேற்குவங்க மாநில அரசுகள் மிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. முதியவர்கள், நீரிழிவு நோய், நுரையீரல், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களை கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.