லெஜண்ட் சரவணா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லீடர்’. எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி இருந்த இப்படத்தில் பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, சந்தோஷ், பிரதாப், பாகுபலி பிரபாக்கர் ஆகியோர் நடித்து இருந்தனர். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கடந்த ஏப். 29 ஆம் தேதி வெளியான லீடர் திரைப்படம் கலவையான விமர்னங்களை பெற்றது. இந்த நிலையில் லீடர் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் மே 29 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.







