தங்கம் விலை தினந்தோறும் ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17.840க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்றும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14.650க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.







