திருக்கழுக்குன்றத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின், 1432 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமா்சையாக தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் சித்திரை
திருவிழாவானது ஆண்டுதோறும் 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று 1432 ம் ஆண்டு சித்திரை திருவிழா நடத்த இந்து சமய அறநிலைத்துறை ஒப்புதலின்படி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது,
முன்னதாக திருமலையில் உள்ள வேதகிரீஸ்வரர் கொடி மரத்திற்கு பூஜை பரிகாரங்கள் செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை நடைபெற்று, பின்னர் கொடியேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்திகளின் ஊர்வலம் நான்கு மாத வீதிகளிடம் நடைபெற்றது. திருவிழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் நிலையில் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஏழாம் நாள் திருத்தேரோட்டம் வரும் 01.05.2023 அன்றும், 04.05.2023 அன்று சங்கு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. மேலும் இவ்விழாவில் ஆண்டுதோறும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
—–ரூபி.காமராஜ்







