விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் அன்பிற்பிரியாள் அம்மன் ஆடிக்கொடை விழா!

திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் ஆடிக் கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளிக்கவசத்தை அம்மனுக்கு சீர்வரிசையாக வழங்கி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள…

திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் ஆடிக் கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளிக்கவசத்தை அம்மனுக்கு சீர்வரிசையாக வழங்கி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள் தரும் அன்பிற்பிரியாள் அம்மன், உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயிலில் ஆடிக்
கொடைவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆடி கொடை விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வெள்ளிக்கவசம் மற்றும் சூலாயுதத்தை பக்தர்கள் சீர்வரிசையாக வழங்கினர்.

மேலும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வேண்டுதலை
நிறைவேற்றினர். இதனைத்தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று
சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி
பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.