முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் இனி அதிரடி அரசியல் இருக்கும்: பாஜக தலைவர் அண்ணாமலை

குற்றவாளிகளை கைது செய்யாமல், எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி என தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை பேசியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் தமிழக பாஜக தலைவர், அண்ணாமலை பேசியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த பூமியில் பாஜக தேசியத் தலைவரை பேச வைப்பது பாஜகவுக்கு பெருமை. தமிழகத்தில் இருள் சூழ்ந்தது போல் திமுக சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் பெட்டி கடைகளில் கூட கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. ஆனால் அவர்களை கைது செய்யாமல், தன்னை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை ஸ்டாலின் கைது செய்கிறார்.

ஆ.ராசா இந்து தாய்மார்களை கொச்சப்படுத்தியுள்ளார். இதை எதிர்த்து குரல் கொடுத்ததற்கு 9 மாவட்டங்களில் பாஜக தொண்டர்கள் 107 பேரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யாமல், எதிர்த்து குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி. சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின் எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும்-ஜே.பி.நட்டா

 

இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள் மண்ணுக்கு போய்விட்டனர். தவறை தட்டிக் கேட்டால் குற்றம் என்றால், தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். இதன் மூலம் தமிழக சிறைச்சாலைகள் நிரம்பும். ஒன்றும் செய்யாமல் நம்பர் 1 – ஆக வர வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். மீசா வழக்கில் சிறைக்கு சென்றதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார். அவர் வேறு எதற்கோ தான் சிறைக்கு சென்றார்.

தமிழகத்தில் இனி அதிரடி அரசியல் இருக்கும் எனப் பேசிய அவர், மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பேன் என்று சொல்லி வாக்கு வாங்கிவிட்டு 54 சதவீதம் உயர்த்தி விட்டனர் எனக் கூறினார். மேலும் பால் விலையை 3 முறை உயர்த்திவிட்டனர். ஆனால் விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை ஒரு முறை கூட உயர்த்தவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் மோடியை காரணம் காட்டுகின்றனர். அவர் எப்போது ? உயர்த்த சொன்னார் சொல்லுங்கள்.

 

மோடி 10,000 நல்ல விஷயங்கள் செய்ய சொல்லி உள்ளார். அதை செய்யாமல், சொல்லாததை செய்து விட்டு, அவரை குறை சொல்கின்றனர். ஸ்டாலின் திருத்திக் கொள்ள வேண்டும், திமுகவிலேயே அதிருப்தி உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கின்றது. ஆனால் தமிழகத்தில் நிதியமைச்சர் வாய் தான் பேசி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு எல்இடி பல்பிற்கு கூட மின்சாரத்தை தயாரிக்கவில்லை. ஆனால் மின் கட்டணத்தை உயர்த்தி மின்வாரியத்திற்கு வருவாய் வந்துள்ளதாக கூறுகின்றனர். இதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

ராகுல் காந்தி பாதையாத்திரையின் போது, பிரிவினை வாதிகளை சந்தித்து வருகிறார். அவரது ஷூ தேய்கிறதோ இல்லையோ, காங்கிரஸ் கட்சி தேய்ந்துவிடும். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். ராகுல் காஷ்மீரை அடையும்போது, காங்கிரஸ் கரைந்துவிடும், என அண்ணாமலைப் பேசினார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு-விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவு

Web Editor

சிவகளை அகழாய்வில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!

Vandhana

கொரோனா தடுப்பூசிகளை வீட்டிற்கு எடுத்து சென்ற செவிலியர் பணியிடை நீக்கம்

G SaravanaKumar