ரயில்களில் பட்டாசு எடுத்து செல்ல தடை- அதிகாரிகள் எச்சரிக்கை

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 24ம் தேதி நாடு முழுவதும்…

ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 24ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே நமது நியாபகத்திற்கு வருவது பட்டாசுகள் தான். தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்வதற்கான முன்பதிவுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரயில்களில் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவுகள் முடிந்துவிட்டன.

இந்நிலையில், ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு, டீசல் , பெட்ரோல் போன்ற பொருட்களை எடுத்து செல்ல தடை உள்ளது இருப்பினும் தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்வார்கள். இதை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்படும்.

விதியை மீறி பட்டாசு எடுத்து சென்றால், அவர்கள் மீது கடும் நடைவடுக்கை எடுக்கப்படும் எனவும், முதல் முறையாக பிடிபட்டால் 1000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அடுத்த வாரம் முதல் பட்டாசு எடுத்து செல்லுவதை தடுக்கும் வகையில் மெட்டல் டிடேக்கடர் உதவிவுடன் பணியாளரின் உடைமைகளை சோதனை செல்ல உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.