வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர் நட்டா பேசியதாவது:
வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும். தமிழகத்தின் கலாசாரம் புனிதமானது. இது அறிவு ஜீவிகளின் மண், இந்த மண்ணிற்கு தலை வணங்குகிறேன்.
மோடி சிறப்பாக கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதால், இங்கு நாம் யாரும் முகக் கவசம் அணியாமல் தைரியமாக அமர்ந்திருக்கோம்.
இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறவில்லை, சமூகம் சார்ந்தும் முன்னேறியுள்ளது. தற்போது நரிக்குறவர் மக்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா ஆயுத ஏற்றுமதியில் முன்னேறியுள்ளது. 
விவசாயத் துறை பட்ஜெட்டில் 2014ல் ரூ.27 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது 1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உள்ளது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி கோடி கோடியாக கொட்டி கொடுக்கிறார்.
பிரதமர் நரோந்திர மோடி சென்னை, மதுரை, கன்னியாகுமரி என 5 இடங்களில் ரயில்வே ஸ்டேஷன்களை புதிப்பித்துள்ளார்.
பாஜக தான் தேசிய கட்சியா உள்ளது. மற்ற கட்சிகள் சுருங்கிவிட்டது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் குடும்ப அரசியல் உள்ளது. தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின், என வரிசைகட்டி வருகின்றனர் என்றார் ஜே.பி.நட்டா.







