சென்னையை சுற்றி சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது – அன்புமணி

சென்னையை சுற்றி 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்க சாவடிகள் இருக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார். பசுமை தாயகம் சார்பில் உருவாக்கப்பட்ட சென்னை தூய காற்றுச் செயல்…

சென்னையை சுற்றி 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுங்க சாவடிகள்
இருக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

பசுமை தாயகம் சார்பில் உருவாக்கப்பட்ட சென்னை தூய காற்றுச் செயல்
திட்டத்திற்கான வரைவு நகலை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.  இதன் முதல் பிரதியை
தந்தி நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் சுப்ரமணியன் பெற்றுக்கொணடார்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி, இன்று உலக சுற்றுச்சூழல் நாள் என்றும்,
சுற்றுச்சூழல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி என்றும் தெரிவித்தார்.

கடலூர் சிப்காட் ரசாயன கலக்கல் பிரச்சனை, ஆறுகளை காப்பாற்றுவது, அனல்மின் மின்
நிலையங்களை மூட கூறி பல முறை போராட்டம் நடத்தியுள்ளோம். குறிப்பாக தூத்துக்குடி நகரில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி முதல் முதலில் குரல் கொடுத்து பாமக என்றும் தெரிவித்தார்.

மது ஒழிப்பு போன்ற எங்களது முன்னெடுப்பை பார்த்து மற்ற கட்சியினரும் தற்போது பேசத் தொடங்கிவிட்டனர். பிரச்சனை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் பல ஆவணங்களை வெளியிட்டுளோம். மற்றவர்களை போல் பேசி மட்டும் செல்வது எங்களது இயக்கம் அல்ல என்றும் சென்னையில் உள்ள காற்று மாசுவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த ஆவணத்தை இன்று வெளியிட்டுள்ளோம் என்றும் கூறினார்.

உலகளவில் காற்று மாசினால் 70 லட்சம் பேர் உயிர் இழக்கின்றனர்
இந்தியாவில் மட்டும் குறிப்பாக சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 11 ஆயிரம் பேரும் ஒரு நாளுக்கு 20 பேரும் காற்று மாசுவினால் உயிர் இழக்கின்றனர்.
பொதுமக்களின் வாகன எண்ணிக்கை தொடர்ந்துக் உயர்ந்து கொண்டு வருகிறதே தவிர, அரசு பொது போக்குவரத்தான பேருந்துகள் அதிக படுத்தமலே உள்ளது என அன்புமணி குற்றம் சாட்டினார்.

அனைவருக்கும் இலவச பேருந்து திட்டத்தை நாங்கள் பலமுறை சொல்லி
வருகிறோம்,பெண்களுக்கு மட்டும் ஒரு சில இடங்களில் இலவசம் என்பது அமலில் உள்ளது. ஆனால் இது அனைவருக்கும் இலவசம் என அறிவிக்க வேண்டும். அரசுப் பேருந்துகள் நவீன
முறையில் இருந்தால் பொதுமக்கள் அதிகளவில் பயணிக்க தொடங்குவர், அவ்வாறு
பொதுமக்கள் போதுபோக்குவரத்தை பயன்படுத்த துவங்கினால் வாகனங்களின் பயன்பாடு
குறையும், சாலைகளின் தேய்மானம் குறிப்பாக சாலை விபத்துகள் பெரிதளவில் குறையும்.

சென்னையில் உள்ள 15 மண்டலகளில் பசுமை தாயகம் மூலம் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தவுள்ளோம் எனவும்
சென்னையில் இருக்கக்கூடிய 200 வார்டுகளில் உள்ள அனைத்து கட்சி கவுன்சிலர்களை
முதலில் சந்தித்து சென்னை தூய காற்று செயல் திட்டத்திற்கான நகலை கொடுத்து
அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மேலும் வீடுகள் தோறும் விழிப்புணர்வு
துண்டு சீட்டுகள் வழங்கவுள்ளோம். அதுப்போல அனைத்துக் கல்லூரி முதல்வர்களை
சந்தித்து இந்த செயல்திட்டத்தை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்
என்றும் தெரிவித்தார்.

 

அனல் மின் நிலையங்களே அதிகமான காற்று மாசுவை ஏற்படுத்துகிறது அதற்கு
அடுத்துதான் போக்குவரத்து வாகனங்கள் அனைத்தும் என தெரிவித்தார். தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும் , சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும்
சென்னையை சுற்றி 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்த சுங்கச்சாவடிகளிலும்
இருக்கக் கூடாது என அன்புமணிி கேட்டுக்கொண்டார்.

மின்சாரம் வானங்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் ஏனெனில்
அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் மின்சாரம் வாகனங்களே அதிக பயன்பாட்டில்
இருக்கும் சுகி ,சோமட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யக்கூடிய நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்யக்கூடிய நபர்களுக்கு மின்சார வாகனங்களை அந்நிறுவனமே வழங்க வேண்டும்.

ஊடகமே எங்கள் முதல் கூட்டணி,
எங்களுடைய முதல் கூட்டணி ஊடக நண்பர்கள்தான் இதை மக்களுக்கு கொண்டு செல்வது உங்கள் கடமை அதை கொண்டு செல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.

சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சீர் அமைப்பதாக கூறி
மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளை சேதப்படுத்தி மழைநீர் வடிகால் அமைப்பதாக கூறி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கென தமிழக அரசு தனி விசாரணைக் குழு அமைத்து முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து
அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.