இந்தியா செய்திகள்

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை: சமாஜவாதி எம்.பி.

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இல்லை என்று சமாஜவாதி கட்சி எம்.பி. ஷஃபிகுர் ரகுமான் பர்க் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதையொட்டி ஞானவாபி மசூதி விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர். நீங்கள் வரலாற்றை உற்று நோக்கினால், அந்த மசூதியில் சிவலிங்கமும் இல்லை. வேறு எதுவும் இல்லை. இந்தக் கூற்று எல்லாமே தவறானதுதான். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது நான் அங்கு மசூதி இருந்தது என்று கூறலாம் அல்லவா? ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருக்கிறது என்று இவர்கள் கூறுவது அதிகாரத்தை மட்டுமே காட்டுகிறது. நாங்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறோம். மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அரசு இதுபோன்று இயங்கக் கூடாது. அரசு என்பது நேர்மையாகவும், சட்டத்தின் விதிகளையும் பின்பற்றி இயங்க வேண்டும் என்று சஃபிகுர் ரகுமான் பர்க் தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வாராணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுற்றுச்சுவரில் உள்ள ஹிந்து கடவுள்களை வழிபட அனுமதிக்குமாறு கோரி ஹிந்துப் பெண்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த மசூதியில் கள ஆய்வு செய்து வீடியோவாகப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. கள ஆய்வு செய்யப்பட்டபோது அந்த மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க பேச்சுவார்த்தை குழு ஏற்படுத்தப்படும்” – உச்சநீதிமன்றம்

Jeba Arul Robinson

இந்தியாவில் புதிதாக 31,382 பேருக்கு கொரோனா: 318 பேர் உயிரிழப்பு

Ezhilarasan

வைரங்களை மெருகூட்டும் தொழில் ஈடுபட்டு வரும் சிறை கைதிகள்!

Saravana