ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை: தமிழிசை

புதுச்சேரியில் ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 30-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும், நடிகை ரெஜினா கசாண்ட்ராவும்,…

புதுச்சேரியில் ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை, என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 30-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளும், நடிகை ரெஜினா கசாண்ட்ராவும், சைக்கிளில் சென்னையிலிருந்து பேரணியாக புதுச்சேரி வந்தடைந்தனர். அவர்களை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 1-ம் தேதி முதல், புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும், இளைஞர்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், என்றும் தெரிவித்தார். புதுச்சேரியில், அதிக அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதால், அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் கண்டறியப்படுவதாகவும், அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.