கொரோனா தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும் எனத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் கரூர் சட்டமன்றத்திற்குரிய தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா விதிகளை முறையாகப் பின்பற்றும் வகையில் தேவையான எற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பாக இந்த மனுவில் வேலாயுதம் பாளையத்தில் தனியார் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடக்க இருப்பதாகவும், இரண்டு அறைகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நடக்க இருப்பதால் அங்கு கொரோனா தடுப்பு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். ஆகவே கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சஞ்சீப் பானர்ஜி அமர்வு நடைபெற்றது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் 4900 சதுர அடி மற்றும் 3400 சதுர அடி அறைகளில் வாக்கும் என்னும் பணி நடக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இரண்டு சுயச்சை வேட்பாளர்கள் தவிர மற்ற சுயச்சை வேட்பாளர்கள் மட்டுமே ஏஜண்டுகளை அனுமதிக்க இருப்பதாகவும்,
கூடுதலாக 6 மேஜைகள் ஒதுக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள் கொரோனா பரவல் இரண்டாவது அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையமே காரணம் என உயர்நீதிமன்றம் கண்டம் தெரிவித்தது. மேலும் நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் நீங்கள் காதில் வாங்கவில்லை எனவும் சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரச்சாரம் செய்ததே தொற்று பரவலுக்குக் காரணம் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள் உங்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை எனத் தேர்தல் ஆணையம் மீது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு காட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும் பிரச்சாரம் நடந்தபோதெல்லாம் வேறு கிரகத்திலிருந்தீர்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், தமிழகம் முழுவதும் வாக்கும் என்னும் மையங்களில் சானிடைசர்கள் தெழித்து முறையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் இதுகுறித்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.







