கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில், கோயில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை அமலுக்கு வந்தது. அதன்படி, வழிபாட்டுத் தலங்களில், பக்தர்கள் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலின் 3 கோபுர வாயில்களும் மூடப்பட்டது. கோயிலின் மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 கோபுர வாயில்கள் மட்டும் மூடப்பட்ட நிலையில், கிழக்கு கோபுர வாயில் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கோயிலுக்கு வழக்கமான பூஜைகள் செய்வதற்காக கோயில் தீட்சிதர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் சென்று வருகின்றனர்.







