உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை- ஓபிஎஸ் பேட்டி

உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில்  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய  ஓபிஎஸ்…

உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில்  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய  ஓபிஎஸ் தெரிவித்ததாவது..

” அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். பொதுக்குழுவைத்தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிடவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாட முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை. மேலும் பொதுக் குழு தீர்மானங்கள் நடைமுறைக்கு வரவில்லை. காகிதத்தில் மட்டுமே உள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டு காலம் போராடி காப்பாற்றிய கட்சியின்  சட்ட விதிகளை காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம்.  அதிமுக எதற்காக தொடங்கப்பட்டதோ அதை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.

இதனையும் படியுங்கள்: ”ஓபிஎஸ் இனி சிங்கப்பாதையை நோக்கி பயணிப்பார்” – ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்

தனிக்கட்சி தொடங்குவீர்களா? என்று சிலர் கேட்கின்றனர். நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும். உயர் நீதிமன்றத்தை நாடுவோம். மக்களிடம் சென்று நீதி கேட்போம்
தர்ம யுத்தத்துக்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.


இதனையும் படியுங்கள்: காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம்!

தற்போதுதான் தங்கள் தரப்பு தொண்டர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்  எடப்பாடி பழனிசாமிதான் திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் எந்தக் கட்சிக்கும் எந்த டீமும் இல்லை. திமுகவின் ஏ முதல் இசட் டீம் வரை அவர்கள்தான்” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.