முக்கியச் செய்திகள் தமிழகம்

”ஓபிஎஸ் இனி சிங்கப்பாதையை நோக்கி பயணிப்பார்” – ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்

ஓபிஎஸ்-ன் அரசியல் பயணம் இதுவரை பூப்பாதையாக பயணித்தது என்றும், இனி சிங்கப்பாதையை நோக்கி ஓபிஎஸ் பயணிப்பார் என்றும் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி அபகரிப்பு அரசியல் நடத்தி வருகிறார். தன்னுடைய கத்தை, கத்தையான பணத்தை வைத்துக்கொண்டு அதிமுகவையும், அதிமுக தொண்டர்களையும் எடப்பாடி பழனிசாமி அபகரிப்பு செய்ய நினைக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கழகத்தில் மனசாட்சி உள்ள அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாட்டத்தை தான் ஆதரிக்கின்றனர். என்னதான் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் தீர்ப்பு சொன்னாலும் பொதுமக்களும், கடைக்கோடி தொண்டனும் சொல்லும் தீர்ப்பு தான் இறுதியானது.

இதையும் படியுங்கள் : 20 ஆண்டுகளுக்கு மேலாக ரன்னிங் கண்டிஷனில் ஜெயலலிதாவின் கார்! – வியப்பில் ஆழ்த்தும் அதிமுக தொண்டர்

ஓபிஎஸ்-ன் அரசியல் பயணம் இதுவரை பூப்பாதையாக பயணித்தது. இனி சிங்கப்பாதையை நோக்கி ஓபிஎஸ் பயணிப்பார். இடைத்தேர்தல் நடக்கும் போது அவசரமாக தீர்ப்பு வெளியிடப்பட்டிருப்பதன் பின்னணி புரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓட்டு போடும் பொது மக்களிடையே சலனத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இணை ஒருங்கிணைப்பாளர்…ஓபிஎஸ் அறிவித்த நியமனம்…எழும் கேள்வி…

Web Editor

கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

EZHILARASAN D

14 வகையான மளிகைப் பொருட்களுக்கான டோக்கன்: நாளை முதல் விநியோகம்!

EZHILARASAN D