“நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை” – தர்மேந்திர பிரதான்!

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என…

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நீட் தேர்வில் விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி  மற்றும் வினாத்தாள் கசிவு என பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று பலரும் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மறுதேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  மறுதேர்வு எழுத விரும்பாதவர்களுக்கு கருணை மதிப்பெண் இன்றி மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,  “தேசிய தேர்வு முகமை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.  அது மிகவும் நம்பகமான அமைப்பாகும்.  நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.  இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.  அதன் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.  எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்”  என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.