மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ திரைப்படத்தின் படப்படிப்பில் நிகழ்ந்த விபத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் ‘நாயகன்’ திரைப்படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார். இந்த திரைப்படத்தில் த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை கூட்டாக இணைந்து தயாரிக்கின்றன.
‘தக் லைப்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில சண்டைக்காட்சிகள் மட்டும் எடுக்கப்படவுள்ளன. தற்போது, பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஹெலிகாப்டரிலிருந்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது அவர் தவறி கீழே விழுந்ததில் இடது பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவர் தமிழில் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : 3-வது முறையாக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காண்டு!
இந்நிலையில், அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் ஆலோசனையின்படி இன்னும் சில வாரங்கள் ஜோஜூ ஜார்ஜ் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.









