அதிமுக தலைமை மீது எவ்வித விமர்சனமும் இல்லை என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தல் முதல் 2021 சட்டமன்றத் தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. இதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாமகவுக்குதான் இழப்பு என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசினார் ஜி.கே.மணி. அப்போது, 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு பெற்றது சமூகநீதியின் மைல்கல் எனத் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி பற்றி முடிவெடுப்பதற்குள் தேர்தல் நெருங்கிவிடும் என கட்சியினர் கோரிக்கை விடுத்ததால் அதனை ஏற்று பாமக தனித்துப் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார். மேலும், அதிமுக கூட்டணியிலிருந்து குறை கூறி வெளியேறவில்லை என தெரிவித்த அவர், அதிமுக தலைமை குறித்து விமர்சிக்கவும் இல்லை எனவும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: