புதிய ஆளுநர் பதவியேற்றவுடன் நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் விடுதலை போராட்ட வீரரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று ஒரே நாளில் நீட் தேர்வு எழுதிய 364 மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்படவில்லை என தெரிவித்த அவர், வரும் 18-ம் தேதி புதிய ஆளுநர் பதவி ஏற்றவுடன் மசோதாவிற்கு ஒப்புதல் பெறப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நேற்று ஒரே நாளில் 32,743 பேர் பயன்பெற்றுள்ளனர் எனவும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதிக்க வழங்க வேண்டும் என்று விரைவில் தேர்தல் ஆணையரை சந்தித்து வலியுறுத்துவோம் என்ற அமைச்சர், மாணவர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டதாக பீதியை கிளப்ப வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தார்