ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் அருவியில் குளிக்க காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஒகேனக்கல்…

ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு முக்கிய சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒகேனக்கல் அருவியில் குளிக்க காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஒகேனக்கல் முக்கிய அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

அண்மைச் செய்தி: “தாயை கொலை செய்த 17 வயது சிறுமி”

இதேபோன்று, ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தனுஷ்கோடி, ராமர் பாதம், கலாம் நினைவகம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதால், அப்பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.