உத்தரகாண்ட் மாநிலத்தின் கோராக்பூர் பகுதியில் கரும்புத் தோட்ட தீயில் சிக்கிய இரண்டு சிறுத்தை குட்டிகளை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் கோராக்பூர் கிராமத்திற்கு அருகே காட்டுப்பகுதியில் இருக்கும் கரும்புத் தோட்டம் தீபற்றி எரிந்தது. அப்போது தீயில் சிக்கிய சிறுத்தை குட்டிகளை பார்த்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கோராக்பூர் பகுதிக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இரு குட்டிகளையும் பத்திரமாக மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரு குட்டிகளையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வனத்துறையினரின் செய்லால் சிறுத்தை குட்டிகள் காப்பற்றப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர், “இரு குட்டிகளும் நெருப்பில் சிக்கி உயிர்தப்பியுள்ளது. சிறுசிறு காயத்துடன் இருக்கும் குட்டிகள் விரைவில் குணமாகிவிடும்” என்று தெரிவித்தார். இரண்டு குட்டிகளும் முற்றிலுமாக குணமடைந்த பிறகு அவை வனப்பகுதியில் மீண்டும் வனத்துறை அதிகாரிகளால் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







