நீட் தேர்வு எழுதுவதற்கு எந்த வயது உச்சவரம்பும் இல்லை என்று தேசிய தேர்வு முகமைக்கு ,தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு அவசியமான ஒன்று. இந்த தேர்வை எழுதுவதற்கு கடந்த ஆண்டு வரை வயது உச்ச வரம்பு இருந்துவந்தது. இந்த வயது உச்சவரம்பினை நீக்கி தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த நிலையில் எந்த வயதை சேர்ந்தவரும் நீட் தேர்வு எழுத வாய்ப்பாக அமைந்தது.
இதனை தொடர்ந்து, இன்று தேசிய தேர்வு முகமைக்கு, தேசிய மருத்துவ ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் நீட் தேர்வு எழுத எந்த வயது உச்சவரம்பும் இல்லை என்று அறிவுறித்தியுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கு எந்த வயது வரம்பும் தேவையில்லை. அதனை நீட் தேர்விலிருந்து நீக்க வேண்டும் என்றும் தேசிய மருத்துவ அணையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நீட் தேர்வுக்கான அறிவிப்பாணையை அதற்கேற்ற வகையில் வெளியிடவும் தேசிய தேர்வு முகமைக்கு, தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.







