முக்கியச் செய்திகள் தமிழகம்

எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ள திட்டம் உள்ளது -அமைச்சர் சேகர்பாபு

எந்த முறையில் கொரோனா வந்தாலும் எதிர்கொள்ளும் தடுக்கும் திட்டம் தமிழக
அரசிடம் உள்ளது என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

வடசென்னை சாத்தாங்காடு பகுதியில் அமைந்துள்ள இரும்பு (ஸ்டீல் யாட்) பகுதியை
ஆய்வு செய்ய அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விரைவில் அமைய விருக்கும் இந்த”ஸ்டீல் சந்தையால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் சுற்றுப் புறப் பகுதி மக்களின் வாழ்வின் மேம்பாட்டுக்களை செய்ய 131 மனைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக 184 மனைகளைப் பதிவு செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும், இந்த வளாகத்திற்குள்ளேயே பெருநகர திட்டத்தின் கீழ் மருத்துவமனை அமைக்கப்படும். அதிக வாகனங்கள் வருவதால் பணிமனை மற்றும் நவீன எடைமேடை அமைத்துத் தரப்பட ஒப்புதல் அளித்துள்ளோம். நிரந்தரமாக உள்ளேயே ஒரு உணவகம் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

அத்துடன், சாத்தாங்காடு புதிய பேருந்து நிறுத்தம் அமைய ஆய்வு நடத்த உள்ளோம்.
தொழில் செய்வோருக்கும் தொழில் முனைவோருக்கும் பெரிய நகரமாக அமைக்கப்படும்.
சென்னை மாஸ்டர் பிளான் பணி பல பணிகள் நிறைவேற்றப்பட இருக்கிறது. மூன்றாவது திட்ட பணி 2026 ஆம் ஆண்டு தான் நடைபெறும். திராவிட மாடல் ஆட்சி அனைவருக்குமான ஆட்சி எனவும் பேசினார்.

மேலும், எந்த முறையிலிருந்து கொரோனா வந்தாலும் அதைத் தடுக்கின்ற நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ளும் வரும் முன் காப்போம் என்ற நோக்கத்தோடு செயல்படுவது தமிழக அரசு. மேலும் முதல்வரின் கைக்கடிகாரம் பற்றி ஜெயக்குமார் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு ஜெயக்குமார் தனது சொத்து விவரத்தையும் தனது பினாமி சொத்தையும் கூறினால் நன்றாக இருக்கும் என்றார்.

அத்துடன், முதலில் ஜெயக்குமார் வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ளட்டும் பின்பு மற்றவர்களை வெளிப்படைத் தன்மையோடு இருக்கச் சொல்லட்டும் எனவும் ஜெயக்குமார் தனது இருப்பிடத்தைக் காட்டிக்கொள்ளவே இவ்வாறு பேசி வருகிறார். 1991ஆல் ஜெயக்குமார் சம்பாதித்த சொத்து எவ்வளவு என கூற முடியுமா எனவும் எனவும் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

Jayapriya

’தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர்’ – தமிழிசை புகழாரம்

G SaravanaKumar

ஹெட்செட் பயன்படுத்துவதால் 100 கோடி இளைஞர்களுக்கு காது கேளாமை அபாயம் – அதிர்ச்சி தகவல்

NAMBIRAJAN