திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்திட அரசு அனைத்து பணிகளையும் விரைவாக செய்வதால், தமிழகம் முழுவதிலும் அதிக அளவிலான கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்று வருகிறது என தமிழக அரசை தருமபுர ஆதீனம் பாராட்டியுள்ளார்.
தஞ்சையில் ஜப்பான் நாட்டின் சிவ ஆதீனம் சார்பில், உலகம் முழுவதிலும் ஆன்மீக வளர்ச்சிக்காக சிறப்பான பல்வேறு பணிகளை செய்து வரும் தருமபுர ஆதீனத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தின் மங்கள இசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய இசை நிகழ்ச்சியுடன்
நடைபெற்ற பாராட்டு விழாவில் தருமபுர ஆதீனத்திற்கு, ஜப்பான் நாட்டின் சிவ ஆதீனம் பாலகும்ப குரு முனி என்கிற தகாயுகி ஹோசி நினைவு பரிசை வழங்கி தருமபுர ஆதீனத்தை பாராட்டினார். ஜப்பான் சிவ ஆதீனத்துடன் அந்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் 30 பேர் விழாவில் பங்கேற்றனர்.விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுர ஆதீனம், ஜப்பான் நாட்டில் 1572 ஆம் ஆண்டில் மிகப் பெரிய சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்டது. இது போல் உலகம் முழுவதும் நமது சைவ நெறி பரவியுள்ளது. நம்முடைய ஆதீனங்கள் செய்கிற பல திருக்கோயில்களின் குடமுழுக்கு விழாக்களை ஜப்பான் நாட்டினரும் முகநூல் வழியாக அறிந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் பிரபல நடிகை அங்கு முருகன் கோயில் கட்டுகிறார். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தருமபுர ஆதீனம் சார்பில் செய்வோம்.
தமிழக அரசு திருக்கோயில்களின் குடமுழுக்கு பணிகளுக்கு விரைவாக ஒப்புதல் வழங்கி
அனைத்து உதவிகளையும் செய்வதால் தமிழகம் முழுவதிலும் குடமுழுக்கு அதிக அளவில்
நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு கூட தமிழ் மாதங்களின் பெயர் தெரியவில்லை. தமிழக அரசு தமிழில் படித்தால் வேலை கிடைக்கும் என்று அறிவித்தால் தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும் என்றார்.