80,90 கால கதாநாயகிகள் போன்று 100 பெண்களுக்கு ஒப்பனை: உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கலைஞர்கள்!

சென்னை பல்லாவரம் தனியார் கல்லூரியில் 100 மேக்கப் கலைஞர்கள் இணைந்து இளம்பெண்கள் நூறு பேருக்கு 80-90 கதாநாயகிகள் போன்று ஒப்பனை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார்…

சென்னை பல்லாவரம் தனியார் கல்லூரியில் 100 மேக்கப் கலைஞர்கள் இணைந்து இளம்பெண்கள் நூறு பேருக்கு 80-90 கதாநாயகிகள் போன்று ஒப்பனை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உலக சாதனை பதிவு செய்யும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதாவது 100 மேக்கப் கலைஞர்கள் இணைந்து இன்றைய 100 இளம் தலைமுறை பெண்களுக்கு 1980-90களில் தமிழ் திரையுலகை கலக்கிய கதாநாயகிகள் போன்று சிகை அலங்காரம் மற்றும் மேக்கப் செய்து அசத்தினர்.

மணப்பெண்களுக்கு நீண்ட நேரம் செய்யக்கூடிய ஒப்பணையை இரண்டு மணி நேரத்தில் செய்து உலக சாதனை நிகழ்த்தி உள்ளனர்.இதனை கலாம் புக் ஆப் வேல்ர்ட்டு ரெக்காட்ஸ் அங்கீகரித்துள்ளது. இறுதியாக மணப்பெண் அலங்காரத்தில் இளம் பெண்கள் ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.