தேனியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு பயன்பாடு குறித்து விளக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சிறு தானிய ஆண்டாக இந்தியா முழுவதிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தில் அதிக
அளவில் சிறுதானிய உற்பத்தி வகைகள் மேற்கொள்ளப்படுவதால் சிறு தானிய உணவு
வகைகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தோடு தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு வகைகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியில் பள்ளி மாணவர்கள் சிறு தானிய வகை உணவு பயன்பாடு குறித்து கோஷம்
எழுப்பியதோடு துரித உணவு வகைகளின் பயன்பாட்டால் ஏற்படும் உடல் உபாதைகள்
குறித்தும் கோஷம் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது
பெரியகுளம் தென்கரை மூன்றாம் பகுதியில் ஆரம்பித்து வைகை அணைச்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
ரெ. வீரம்மாதேவி
தேனியில் சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி!
தேனியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு பயன்பாடு குறித்து விளக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் சிறு தானிய ஆண்டாக இந்தியா…






