ஜி 20 மாநாட்டில் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் பாரத் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஜி-20 மாநாடு டெல்லியில் கோலாகலமாக தொடங்கியது. இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மாட்டை பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது அவரது இருக்கைக்கு முன் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் விருந்து அளிக்கிறார். அதற்காக அவர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கமாக ‘இந்திய குடியரசுத் தலைவர் என்று இருப்பதற்கு பதிலாக, இந்த அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ (பிரெசிடென்ட் ஆஃப் பாரத்) என இடம்பெற்றிருந்தது.
எதிர்க்கட்சி கூட்டணிக்கு INDIA என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலடியாக இந்தியாவுக்கு பதில் பாரத் என பெயரை பாஜக பயன்படுத்த தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.







