முக்கியச் செய்திகள் தமிழகம்

நவ.1 முதல் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வரக்கூடிய நிலையில் தற்போது அமலில் இருக்கக்கூடிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவ.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து வகை கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வழங்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு இன்று முதல் தளர்த்தப்படுகிறது.

அதேபோல 1-11-2021 முதல்

➢ அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8ஆம் வரையுள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி.

➢ திரையரங்குகள் நூறு சதவிகிதம் பார்வையாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி.

➢ கூட்ட அரங்குகளில், அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதி.

➢ ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும், செயல்பட அனுமதி.

➢ மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர் சாதன பொது பேருந்து போக்குவரத்து, நூறு சதவிகிதம் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.

➢ அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD, பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் போன்ற அரசு பயிற்சி நிலையங்கள் / மையங்கள் நூறு சதவிகிதம் பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி.

➢ தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்கள் / கலைஞர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதி.

சிகிச்சை தேவைகளுக்காக (Therapeutic purposes) நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் இன்று முதல் அனுமதியளிக்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கடம்பூர் ராஜுவை எதிர்த்து தினகரன் போட்டி!

Saravana Kumar

ஆபாசப் பட விவகாரம்: ’என் கணவர் அப்பாவி..’ நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்

Gayathri Venkatesan

பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்தது எந்த மாநில அரசும் செய்யாதது: அமைச்சர் ரகுபதி

Ezhilarasan