தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில், 1,140 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பானது 26,94,089 ஆக அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல 1,374 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 26,44,805 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 17 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பானது 36,004 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 13,280 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,25,158 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஏறத்தாழ 5,01,76,761 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய பாதிப்பில் அதிகப்பட்சமாக சென்னையில் 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்தபடியாக கோவையில், 132 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருப்பூரில் தலா, 97, 81 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் தற்போது அமலில் இருக்கக்கூடிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவ.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகை கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வழங்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு இன்று முதல் தளர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.