ராமநாதபுரம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம், பாரதி நகர் பகுதியில் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு நுழைந்த இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை வங்கி கட்டுப்பாட்டு அறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் அறிந்துகொண்ட ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடிக்க முடியாத இளைஞர் தலைமறைவான நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.







