பெண் பலி; நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

தென்காசி அருகே ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து பெண் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர்…

தென்காசி அருகே ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் இருந்து பெண் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தனது மகளின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்கிவிட்டு, தனியார் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே வந்ததும் இறங்குவதற்காக எழுந்த மகேஸ்வரி, நிலைத்தடுமாறி ஓடும் பேருந்தில் இருந்து உருண்டு கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை பேருந்தில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பேருந்தில் இருந்து அவர் கீழே விழுந்த காட்சிகள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.