கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அரசு பேருந்தில் நடிகையை பார்த்து ஆபாச சைகை காண்பித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து
ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் நடிகையும் மாடல் அழகியுமான நந்திதா என்பவர் பயணம் மேற்கொண்டார்,
அப்போது அங்கமலி பகுதியில் இருந்து பேருந்தில் ஏறிய சாவத் என்ற இளைஞர் இருக்கையில் அமர்ந்து கொண்டு நடிகையை பார்த்து ஆபாச செய்கையில்
ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அந்த இளைஞரை தட்டிக்கேட்டார். ஆனால் அந்த இளைஞர் நடிகை நந்திதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பேருந்தை காவல் நிலையம் கொண்டு செல்ல வலியுறுத்திய நிலையில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி இளைஞர் சாவத்திடம் கேட்கவே சாவத் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதை தொடர்ந்து பொதுமக்கள் உதவியுடன் சாவத்தை பிடித்த ஓட்டுநர் மற்றும்
நடத்துநர்,நெடும்பாசேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணை
மேற்கொண்டு வரும் நிலையில் நடிகை வாக்கு வாதம் செய்யும் காட்சி வைரலாகி
வருகின்றன.







