முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

பிரியாணியில் லெக்பீஸ் இல்லாததால், கலவர பூமியான கல்யாணமேடை!

உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்வின் பிரியாணியில் லெக்பீஸ் இல்லாததால், கல்யாணமேடை  கலவர பூமியாக மாறியது. 

உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டம் நவாப்கஞ்ச் பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு வருகைபுரிந்த விருந்தினர்களுக்கு உணவாக சிக்கன் பிரியாணி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்தியில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பிரியாணியில் ஒரு லெக்பீஸ் கூட இல்லை என கோபமாக கேட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்வார்த்தை முற்றி இருவீட்டாருக்கும் சண்டை போட ஆரம்பித்துள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாறிமாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், அந்த இடமே கலவர பூமியாக மாறியது.

கைகளில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது மட்டுமின்றி, மண்டபத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகள் என கைகளில் கிடைப்பதைக் கொண்டு அடித்துக் கொண்டதில் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து மாப்பிள்ளை கல்யாணத்தை நிறுத்துவாக கூறியதற்கு பின் கலவரம் ஓய்ந்துள்ளது. பின்னர் மாப்பிளையை சமாதானபடுத்திய மணமகள் வீட்டார் கல்யாணத்தை நடத்தி மணமக்களை அழைத்துச் சென்றனர்.

இதனை திருமணத்துக்கு சென்றவர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த காணொலி வேகமாக பரவி வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும், விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உள்ளூர் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கோவாக்ஸின் தடுப்பூசி 81% வரை பலனளிக்கிறது: பாரத் பயோடெக் நிறுவனம்!

Jeba Arul Robinson

சந்திரமுகி 2; வேட்டையன் ராஜா வருகிறார்! ராகவா லாரன்ஸ் பகிர்ந்த புகைப்படம்!

Web Editor

‘போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது’ | ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் மீண்டும் கேள்வி!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading